காஞ்சிபுரம் பாலூர் பரசுராமேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள்
ADDED :2650 days ago
காஞ்சிபுரம்:பாலூர் பரசுராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத் திற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை உள்ள பாலூர் காட்டு பகுதியில், சிவலிங்கம் மற்றும் சண்டிகேஸ்வரர் சிலை மண்ணுக்குள் இருப்பதை, சில ஆண்டுகளுக்கு முன், இவ்வூர் மக்கள் கண்டு, கோவில் கட்டினர்.
தேவ பிரஸனத்தின் போது, இறைவன் பெயர் பரசுராமேஸ்வரர் என்றும், அம்மன் பெயர் மங்களாம்பிகை என்பதும் தெரிந்தது.
இந்தக் கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு உதவ விரும்புவோர், 9626791234 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பணிக்குழு உறுப்பினர்கள், கே.ஆர்.கபிலன், டி.எஸ்.கார்த்தீபன் கூறினர்.