அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா
ADDED :2650 days ago
பழநி: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி முருகன்கோயிலைச் சார்ந்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு நேற்று காலை பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து கொடியேற்றம் நடந்தது. இரவு பவளக்கால் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளினார். விழாவில் முக்கிய நிகழ்வாக ஆக., 28ல் திருக்கல்யாணமும், ஆக.,30ல் தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.