தர்மமுனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2714 days ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் தர்மமுனீஸ்வரர் கோவிலில் இரண்டு சேமங்குதிரைகள் கட்டப்பட்டுள்ளது. பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை சத்திரக்குடியை சேர்ந்த ஜெயமணி–சரஸ்வதி வாரிசுகள் கண்ணன் – கிருஷ்ணவேணி, கோமதி – ரவிச்சந்திரன், லோகிதாசன் – ஜெயசித்ரா, ரஜினிகாந்த் – சுகன்யா ஆகியோர் நடத்தினர். அனுக்கை,விக்னேஸ்வர பூஜை,பஞ்சகவ்யபூஜை,மகா பூர்ணாகுதி,கணபதி ஹோமம் நடந்தது. கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டு,பிறகு சேமங்குதிரைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை சத்திரக்குடியை சேர்ந்த ஜெயமணி – சரஸ்வதி குடும்பத்தினர், கீழச்சாக்குளம், கிராம கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.