பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய வரலாறு
ADDED :2679 days ago
தன் அருள் விளையாட்டால் சாபம் நீங்கப் பெற்ற பன்றி முகச் சகோதரர்களை பாண்டியனின் அமைச்சர்களாக்கத் திருவுளம் கொண்டார் சோமசுந்தரக் கடவுள். பாண்டியன் கனவில் தோன்றி “பன்றி மலையில் வாழும் பன்றிமுக வீரர் பன்னிருவரை உடன் அமைச்சர்களாக்கிக் கொள்!” என்று கட்டளை இட்டார் ஈசன். தெய்வக் கட்டளைப்படி பாண்டியன் சகோதரர் பன்னிருவரையும் வரவழைத்து தம் அமைச்சர்களாக்கிக் கொண்டான். பழைய மந்திரிகளின் பெண்களை அவர்களுக்கு மணமுடித்து வைத்து பன்றிமுக அமைச்சர்களின் துணையுடன் நீண்ட நாள் நல்லாட்சி செலுத்தி ஈசன் அடியை அடைந்தான். பன்றி முக வீரர்களும் சிவகணங்களுடன் சேர்ந்து சிறப்புப் பெற்றனர்.