திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை
ADDED :2669 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான எல்லைக்குட்பட்ட திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக, கோவிலில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், பத்மாவதி தாயாரை எழுந்தருள செய்து, அர்ச்சகர்கள் விரதத்தை அனுஷ்டித்தனர். உற்சவரான தாயார் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தார். காலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.