மனைவியின் ஆயுள் அதிகரிக்க கணவர் என்ன வழிபாடு செய்யலாம்?
ADDED :2646 days ago
இப்படி கேட்பதே மகிழ்ச்சியான விஷயம். விரதமிருப்பது பெண்களுக்கு உரியது என ஆண்கள் கருதுகின்றனர். திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் “நீ நீண்ட ஆயுளுடன் வாழ பொரியினால் ஹோமம் செய்கிறேன்” என மந்திரம் சொல்லி ஹோமம் செய்ததை அனைவரும் உணர வேண்டும். மனைவிக்காக கணவர் திங்களன்றும், கணவனுக்காக மனைவி வெள்ளியன்றும் இஷ்ட தெய்வத்திற்கு விரதமிருக்க அன்பும், ஆயுளும் அதிகரிக்கும்.