காரைக்காலில் வரலட்சுமி விரதம்
ADDED :2703 days ago
காரைக்கால்: காரைக்கால் சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி கோவிலில், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, லட்சுமி மற்றும் துர்க்கைக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மகாலட்சுமி மற்றும் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் துர்க்கை, லட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் சாற்றி, மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. வரலட்சுமி விரதம் பெற்ற பெண்களுக்கு, மகாலட்சுமியை வழிபட்டு தாம்பூலம் கொடுக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் வரலட்சுமி நோன்பில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.