வீரகார வீரபத்திர சுவாமி கோவில் விழா
ADDED :2667 days ago
எலச்சிபாளையம்: மாவுரெட்டிபட்டி, வீரகார வீரபத்திர சுவாமி கோவிலில், முப்பூஜை திருவிழா நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், மாவுரெட்டிபட்டி ஜெய்லிங்கம்மாள், வீரகார வீரபத்திர சுவாமி, எல்லம்மாள் கோவிலில், கடந்த, 17ல் மஞ்சள் முடிப்பு நிகழ்வுடன் திருவிழா துவங்கியது. கடந்த, 22ல் வீட்டுகோவில் பூஜை, 23ல் அபி ?ஷகம், சந்தனக் காப்பு அலங்காரம், படைக்கலம் புறப்படுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கிடாவெட்டுதல், 4:00 மணிக்கு பெரும்பூஜை, 5:00 மணிக்கு காவுசாதம் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.