உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்

விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், விநாயகர் சிலை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, சிலைகள் செய்து தரும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், அர்த்தநாரீஸ்வரர் விநாயகர், குதிரை சவாரி செய்யும் விநாயகர், தேர் ஓட்டும் விநாயகர், மான், சிங்கம், அன்னம், மயில் போன்ற வாகனங்களில் அமர்ந்துள்ளது போன்றும், மூன்றடி முதல், 15 அடி உயரம் வரையில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இதில், மூன்றடி உயரமுள்ள சிலை, 3,500 ரூபாய், ஐந்து அடி உயர சிலை, 5,500 ரூபாய், 15 அடி உயர சிலை, 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. களிமண் மற்றும் மரவள்ளிக்கிழங்கு கூழ் மூலம் செய்யப்படும் சிலைகளுக்கு, ஆயில் பெயின்ட், வாட்டர் பெயின்ட் ஆகியவற்றால், பல வண்ணங்களில், சிலைகளை ஆர்டர்கள் கொடுப்பவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தொழிலாளர்கள் செய்து கொடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !