கிளியனுார் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2642 days ago
வானுார்: கிளியனுார் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ஆவணி பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வானுார் அருகே கிளியனுாரில் உள்ள ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், வாமணர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு பெருமாளுக்கு விஷேச அபிஷேகம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனையும் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆவணி பவுர்ணமியில் வாமணர் அவதாரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கிளியனுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.