நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2752 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பூலோகநாதர் கோவிலில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. பின்னர், பூலோகநாதருக்கு சங்காபிஷேகம் நடந்தது. எந்த கோவிலிலும் இல்லாத வகையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒரே சமயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, புவனாம்பிகை சமேத பூலோகநநாதர் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.