காவடியுடன் பழநி புறப்பட்ட தேவகோட்டை பக்தர்கள்!
ADDED :5054 days ago
தேவகோட்டை : தேவகோட்டை பக்தர்கள் பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சுமார் 520 ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று முருகனை வழிபட்டு வருகின்றனர்.இவ்வாண்டு தைப்பூசம் பிப்.7 ல் வருகிறது.முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் உட்பட பல கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் தேவகோட்டை வந்து இங்கிருந்து புறப்பட்டனர். சிறப்பு வழிபாடாக 44 நகரத்தார்கள் காவடியேந்தி பாதயாத்திரை செல்கின்றனர். நகர பள்ளிக்கூடத்தில் காவடி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலுக்கு வந்தனர். நேற்று அதிகாலை 7 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.