உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேளம்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம்

கேளம்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம்

சென்னை: கேளம்பாக்கம் பசுபதீஸ்வரர் - சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் சம்ரோக்ஷணம் இன்று நடக்கிறது.சென்னையை அடுத்த கேளம்பாக்கம், திருவெளிச்சையில் அமைந்துள்ளது, பசுபதீஸ்வரர் -சுந்தர வரதராஜ பெருமாள் கோவில். சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர்,இந்த கோவிலை ஏற்படுத்தினார். ஐந்து நிலை ராஜகோபுரங்களுடன் திகழும் இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேகம் மற்றும் சம்ரோக்ஷணம், இன்று நடக்கிறது. காலை, 7:30 மணி முதல், நான்காவது கால யாக சாலை பூஜை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, கலசங்கள் புறப்பாடுடன், அனைத்து மூலவர் விமானங்கள், ராஜகோபுரம், கொடிமரத்திற்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம், சம்ரோக்ஷணம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவ மூர்த்தி திருக்கல்யாணம் நடக்கிறது.
 
ஞானச்சேரி அமைப்பு கடந்த, 18ம் நுாற்றாண்டில் பிறந்த, சதாசிவ பிரம்மேந்திரர், கேளம்பாக்கம் திருவெளிச்சையில், பசுபதீஸ்வரர் - சுந்தர வரதராஜ பெருமாள் கோவில்கள் உருவாக மூல காரணமாக இருந்தவர், சதாசிவ பிரம்மேந்திரர். இவர், ஞானச்சேரி என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம், இறை உணர்வை உணர்த்தி, பக்தி, அன்பு, கருணையை உபதேசித்தார். பழமையான கருத்துகளுக்கு, புதுமையான விளக்கம் அளித்தவர். ஏராளமான ஆன்மிக நுால்களை படைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !