/
கோயில்கள் செய்திகள் / இடைப்பாடி சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் : குடும்பத்தினருடன் முதல்வர் பங்கேற்பு
இடைப்பாடி சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் : குடும்பத்தினருடன் முதல்வர் பங்கேற்பு
ADDED :2640 days ago
இடைப்பாடி: சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகத்தில், முதல்வர் பழனிசாமி, குடும்பத்துடன் பங்கேற்றார். சேலம் மாவட்டம், இடைப்பாடி, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், பாலஆஞ்சநேயர் கோவில்களை, முதல்வர் பழனிசாமி, தன் சொந்த செலவில் கட்டியுள்ளார். அதன் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த, ஆறு கால பூஜையின் இறுதியாக, கோபுர கலசத்துக்கு, ஆச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றினர். இதில், முதல்வர் பழனிசாமிக்கு, பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கமணி, ராமச்சந்திரன், எம்.பி., பன்னீர்செல்வம், முதல்வரின் மனைவி ராதா, மகன் மிதுன்குமார், அண்ணன் கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். கோவில் பிரகாரத்தில், குறைந்தளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டதால், வெளியே இருந்து, திரளானோர், கும்பாபிஷேகத்தை பார்த்தனர்.