எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: 108 சங்காபிஷேகம்
ADDED :2600 days ago
ஈரோடு: ஈரோடு, 54வது வார்டு நக்கீரன் வீதியில் உள்ள சித்தி விநாயகர், புது எல்லை மாரியம்மன் கோவில் 12ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா, 108 சங்காபிஷேக நேற்று நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமம் நடந்தது. 108 சங்குகளை வைத்து சிறப்பு பூஜை, சங்காபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு, வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் ஹோமம், பூஜைகளை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர், இளமலர்கள் நண்பர்கள் நற்பணி மன்றம், கிங்பாய்ஸ் நண்பர்கள் செய்திருந்தனர்.