விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :5000 days ago
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு சந்திப்பில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல்நாள் விழா, கணபதி ஹோமம், கோ பூஜைகளுடன் துவங்கியது. விநாயகர் சிலை பிரதிஷ்டையும் நடந்தது. இரண்டாம்நாள் கும்பம் வைத்து யாகபூஜைகள் நடந்தன. சிறப்பு வழிபாட்டிற்குப்பின், புனிதநீர் கும்பங்களை சிவாச்சர்யார்கள் ஊர்வலமாக எடுத்துவந்து கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர். அபிஷேகநீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.