நல்லதை மட்டும் பேசலாமே
ADDED :2597 days ago
பக்கத்தில் இருப்பவர்களை பொறாமை யுடன் பார்ப்பதும், அவர்களிடம் பணம், பொருள் என கேட்டு நச்சரிப்பதும் தற்காலத்தில் பெருகிவிட்டது. பக்கத்து வீட்டினரைச் சந்திக்கும் போது மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது அல்லது யாரையாவது குறை சொல்வது மனிதனின் வழக்கமாகி விட்டது. இது பற்றி நபிகள் நாயகம் “இறைவனையும், இறுதிநாளையும் நம்பியவர்கள் அண்டை வீட்டாருக்கு சிரமம் தராமல் இருக்கட்டும். தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். நல்லதை மட்டுமே பேசட்டும். இல்லையெனில் மவுனமாக இருக்கட்டும்” என்கிறார். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் இனி நல்லதை மட்டுமே பேசுவார்கள்.