இந்த வாரம் என்ன?
* செப்டம்பர் 1 ஆவணி 16: திருச்செந்தூர் முருகன் தங்கமுத்துக்கிடா வாகனம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் அபிஷேகம், திருவல்லிக்கேணி வரதராஜருக்கு திருமஞ்சனம், குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.
* செப்டம்பர் 2 ஆவணி 17: கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம், திருநெல்வேலி நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம், திருச்செந்தூர் முருகன் வெள்ளி யானை வாகனம், திருப்பரங் குன்றம் முருகன் தங்கமயில் வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* செப்டம்பர் 3 ஆவணி 18: பாஞ்சராத்ர ஜெயந்தி, பெரிய வாச்சான் பிள்ளை திருநட்சத்திரம், திருச்செந்தூர் முருகன் குடவருவாயில் ஆராதனை, வரகூர் வெங்கடேசப் பெருமாள் உறியடி உற்ஸவம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பவனி, மதுரை நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம், கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* செப்டம்பர் 4 ஆவணி 19: நயினார் வரதாச்சாரியார் திருநட்சத்திரம், பிள்ளையார்பட்டி, தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர் விநாயகர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை நவநீதகிருஷ்ணர் சேஷ வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* செப்டம்பர் 5, ஆவணி 20: திருச்செந்தூர் முருகன் உருகுச்சட்ட சேவை; மாலையில் சிவப்பு சாத்தி பவனி, திருவலஞ்சுழி சுவேதவிநாயகர் உற்ஸவம் ஆரம்பம், மதுரை நவநீதகிருஷ்ணர் வீணைமோகன அலங்காரம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிம்மவாகனம்.
* செப்டம்பர் 6, ஆவணி 21: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், செறுத்துணை நாயனார் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் பச்சை சாத்துதல், மதுரை நவநீதகிருஷ்ணர் நாராயணர் திருக்கோலம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம், திண்டுக்கல் விநாயகர் பவனி.
* செப்டம்பர் 7, ஆவணி 22: பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரர் அபிஷேகம், அதிபத்தர், புகழ்துணை நாயனார் குருபூஜை, மதுரை நவநீத கிருஷ்ணர் ரங்கநாதர் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனம், திருச்செந்தூர் முருகன் கைலாச பர்வத வாகனம்.