மதுரையில் காட்சி தந்த ரமணமகரிஷி
ADDED :2592 days ago
மதுரை; மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜம், மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுவினரின் மகான்களின் முகாம் நாடக விழாவில் பகவான் ஸ்ரீரமணர் நாடகம் நடந்தது. பாம்பே ஞானம் இயக்கத்தில் அரங்கேறிய இந்த நாடகத்தில் பகவான் ரமணர் மகரிஷி திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளிய உபதேசங்களை காட்சிகளாக நடித்துக் காட்டினர். இதில் வயதான ரமணராக நடித்த பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரங்கு நிறைந்த காட்சியாக அரங்கேறிய இந்த நாடகம் ரசிகர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. ரமணர் பிறந்தது முதல் ஜோதிவடிவில் அண்ணாமலையாருடன் சென்று சேர்ந்தது வரை உள்ள காட்சிகள் அவர் வாழ்ந்த காலத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றன.