பழநி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா
ADDED :2592 days ago
பழநி,கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் உபகோயிலான காந்திரோடு வேணுகோபால பெருமாள் கோயிலில் பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களில் பெருமாளுக்கு அபிஷேகமும், கிருஷ்ணர் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பொரி, அவுல், வெண்ணெய், லட்டு நைவேத்யம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சிறுவர்,சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, திருக்கோயிலை வலம் வந்து, கோலாட்டம், கும்மியடித்து, பெருமாளை வழிபட்டனர். இதேப்போல அகோபில பெருமாள்கோயில், லட்சுமிநாராயணப் பெருமாள்ககோயில் பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.