உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிஷேகம்

காளியம்மன் கோவில் மண்டல பூஜையில் 108 சங்காபிஷேகம்

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 29ல் நடந்தது. அதை முன்னிட்டு, 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜை, 30ல் தொடங்கியது. நான்காம் நாளான நேற்று, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது. அதற்காக, வலம்புரி சங்குகளை சுத்தம் செய்து, புனிதநீர் நிரப்பி, மலர்களால் அலங்கரித்து, யாக பூஜை நடந்தது. பின், புனிதநீரால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !