கமுதியில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :2647 days ago
கமுதி: கமுதியில் ஆதிபராசக்தி மன்றத்தினர் சார்பில் மழை பெய்ய வேண்டி 1008 கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. விஜி, மன்ற தலைவி தமிழ்செல்வி தலைமை வகித்தனர். ஆதிபராசக்தி மன்ற பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து முளைப்பாரி, கஞ்சி கலயத்தை சுமந்து சென்று அம்மனுக்கு படைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.