திருப்பரங்குன்றம் கிருஷ்ணன் கோயிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :2648 days ago
திருப்பரங்குன்றம்:கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருப்பரங் குன்றம், திருநகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை ஊஞ்சல் சேவையில் உற்ஸவர்கள் அருள்பாலித்தனர். திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் முளைப்பாரி கரைத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அவனியாபுரம் சிந்தாமணி ராதா கிருஷ்ணன்கோயிலில் விளக்கு பூஜை நடந்தது.