ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா
ADDED :2591 days ago
மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த உறியடி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:00 மணிக்கு கிருஷ்ணர் வீதியுலா, மாலை 4:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உறியடி திருவிழா நடந்தது.