தஞ்சாவூர் குளத்தில் கிடைத்த புத்தர் சிலை
ADDED :2591 days ago
தஞ்சாவூர்: பேராவூரணி குளத்தில், அரையடி உயரம் உள்ள வெண்கல புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர், பேராவூரணி அடுத்த செங்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், நேற்று காலை, நாட்டாணிக்கோட்டை முனிக்கோவில் குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது, அவரது காலில் ஏதோ இடறியது.அவர், அதை எடுத்து பார்த்த போது, அரையடி உயரத்தில், 1.5 கிலோ எடையுள்ள, வெண்கலத்தால் ஆன, புத்தர் சிலை என்பது தெரிந்தது. சிலையை, பேராவூரணி தாசில்தார், பாஸ்கரனிடம்; முருகேசன் ஒப்படைத்தார். சிலை குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.