உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பெரியகுளம்;பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்திவிழா நடந்து வருகிறது. தினமும் அகண்ட நாமகீர்த்தனத்துடன் சிறப்பு பூஜை துவங்குகிறது. ஏராளமான சிறுவர், சிறுமிகள் ராதை, கிருஷ்ணர் வேடத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று (செப்., 4ல்) காலை கோ பூஜையுடன் துவங்கியது. ராதை, கிருஷ்ணர் ஊஞ்சல் சேவை, 504 துளசி செடிகளின் நடுவில் கிருஷ்ணர் அலங்காரம், பூக்களால் அர்ச்சனை நடந்தது.

ராதை, கிருஷ்ணர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். கிருஷ்ணரின் பாலலீலைகள் குறித்து கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.

தினமும் காலை 8:00 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம் ஆன்மிக சொற்பொழிவை கதாதரன் நிகழ்த்தி வருகிறார்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !