ஈரோடு பெருமாள் கோவில் உற்சவருக்கு சப்பரம்
ADDED :2651 days ago
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், விசேஷ காலங்களில் உற்சவர் திருவீதி உலா நடக்கும். அதன்படி, நாளை புதிய தெப்பக்குளத்தில் கும்பாபிஷேகம், இரவில் தெப்போற்சவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் வருணாம்பிகா சமேத கபாலீஸ்வரர், கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் உற்சவர் சிலைகள், திருக்குளத்துக்கு கொண்டு செல்லப்படும். இதில், கஸ்தூரி அரங்கநாதர் பவனி வர, ஈரோட்டை சேர்ந்த ஒரு பக்தர், தேக்கு மர சப்பரம் செய்து கொடுத்துள்ளார்.
கும்பகோணத்தில் ஒரு சிற்பக்கூடத்தில் செய்யப்பட்ட சப்பரம், கோவிலுக்கு நேற்று (செப்., 4ல்) கொண்டு வரப்பட்டது.
அழகிய வேலைப்பாடுகளை கொண்ட, புது சப்பரத்தில், கமலவல்லி தாயார், கஸ்தூரி அரங்கநாதர் உலா வருவர்.