உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரியில், இஸ்கான் அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா

கிருஷ்ணகிரியில், இஸ்கான் அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், இஸ்கான் அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா நடந்தது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், கிருஷ்ணகிரி ராயப்பன் தெருவில் உள்ள சாந்தி திருமண மண்டபத்தில், கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா நேற்று முன்தினம் (செப்., 3ல்) துவங்கியது. இதையொட்டி காலை மங்கள ஆர்த்தி, துளசி பூஜை, தரிசன ஆர்த்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் ஆகியவை நடந்தது.

மாலை, 5:00 மணி முதல் துளசி பூஜை, சந்தியா ஆர்த்தி, கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, உரியடி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 10:30 மணிக்கு கிருஷ்ணன்-ராதாவிற்கு சிறப்பு அபிஷேககம், மஹா மங்களாரத்தி ஆகியவை நடந்தது. கிருஷ்ணனின் பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று  (செப்., 4ல்)  காலை சொற்பொழிவு நடந்தது. பின்னர், ஸ்ரீல பிரபுபாதருக்கு அபிஷேகம், குரு பூஜைநடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !