உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் 8ல் உறியடி திருவிழா

ஊத்துக்கோட்டை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் 8ல் உறியடி திருவிழா

ஊத்துக்கோட்டை:சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், 8ம் தேதி, உறியடி திருவிழா நடைபெற உள்ளது.

ஊத்துக்கோட்டை, தட்டார தெருவில் உள்ளது சந்தான வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலை, பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைத்து, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தினர்.
இக்கோவிலில், 8ம் தேதி உறியடி திருவிழா, மாலை, 6:00 மணிக்கு நடைபெறும். மறுநாள், காலை, 9:00 மணிக்கு சுவாமியின் உருவம் பொறித்த படம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !