தேனி கணேச கந்தபெருமாள் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :2603 days ago
தேனி:தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந் தது. கிருஷ்ணர் வேடமிட்டு பூஜையில் பங்கேற்ற 146 குழந்தைகள் ,கிருஷ்ண லீலா பாட்டு பாடினர். கிருஷ்ண லீலா நிகழ்ச்சிகள் நடந்தன. தேனி வைகை அரிமா சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் என்.ஆர்.டி., அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.