மாமல்லபுரம் மலை மண்டல பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2601 days ago
மாமல்லபுரம்: சதுரங்கப்பட்டினம், மலை மண்டல பெருமாள் கோவில், மகா கும்பாபிஷேகம் நேற்று (செப்., 6ல்) நடந்தது. கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில், பெருந்தேவி தாயார் சமேத மலை மண்டல பெருமாள் கோவில், 1,000 ஆண்டு களுக்கும் மேற்பட்ட, விஜய நகர கால, பழமையான வைணவ கோவிலாக விளங்குகிறது. இங்கு நேற்று (செப்.,6ல்), மஹா கும்பாபிஷேகம் நடந்தது. யாக சாலை வழிபாடு நிறைவு பெற்று, 8:25 மணிக்கு, மூலவர் உள்ளிட்ட சன்னிதி விமானங்கள், கொடிமரம் ஆகியவற்றில், புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். மாலையில், திருக்கல்யாண உற்சவம், இரவு, சுவாமி வீதியுலா நடந்தது.