உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், நாகலத்துமேடு பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நேற்று (செப்.,6ல்) விமர்சையாக நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், நாகலத்து மேடு பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று (செப்., 6ல்) காலை, கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, இதற்கான ஹோமம் செவ்வாய்க்கிழமை துவங்கியது. நேற்று முன்தினம் (செப்.,5ல்) புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று (செப்.6ல்), காலை, 9:00 மணிக்கு, மூலவர் திரவுபதி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலமுருகன், அய்யப்பன், ஆஞ்சனேயர் சன்னதி விமானங்களுக்கும் புனித நீர் அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, அம்மன் வீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !