உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 300 இடங்களில் விநாயகர் சிலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 300 இடங்களில் விநாயகர் சிலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 300 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு செப்.,14, 15ல் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும், என்று இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வக்கீல் ராமமூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியது: செப்.,13ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்படும். ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், பரமக்குடி பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் செப்.,14ல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

ராமநாதபுரம், தேவிபட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, ஏர்வாடி பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் செப்.,15ல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வைக்கப்படும் சிலைகளை செப்.,14, 15 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் விஜர்சனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !