உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் சோழர் கால கோவில் பக்தர்களால் சீரமைப்பு

திருப்போரூர் சோழர் கால கோவில் பக்தர்களால் சீரமைப்பு

திருப்போரூர்:சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட, கமல நாராயண பெருமாள் கோவில், காயார் கிராம மக்கள் முயற்சியால் சீரமைக்கப்பட்டுள்ளது. 12ம் தேதி சம்ப்ரோக் ஷணம்
காணுகிறது.

திருப்போரூர் அருகே காயார் கிராமம் உள்ளது. இங்கு, 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களாக, ஆடேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. மாம்பாக்கம் செல்லும் சாலையில், கமல நாராயண பெருமாள் கோவில், பெரிய திருமேனியுடன், கி.பி., 986ல் கட்டப்பட்டு, கவனிப்பின்றி இருந்து வந்தது.

சில ஆண்டுகளாக அவ்வூர் சமூக ஆர்வலர்கள் ஏற்பாட்டில், பல லட்ச ரூபாய் செலவில், திருப்பணிகள் நடந்து, கோவில் சீரமைக்கப்பட்டது. இந்த கோவிலில், 12ம் தேதி சம்ப்ரோக் ஷணம்நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !