ஈரோட்டில் விநாயகர் சிலைகள் கண்காட்சி துவக்கம்
ADDED :2607 days ago
ஈரோடு: ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், விநாயகர் சிலைகள் கண்காட்சி விற்பனை துவங்கியது. வரும், 14 வரை நடக்கிறது.பஞ்சலோகம், பித்தளை, பேப்பர் கூழ், மண், வெள்ளருக்கு வேர், மார்பிள் பவுடர், மாவுக்கல், கருங்கல்லில் தயாரிக்கப் பட்ட சிலைகள் விற்பனைக்கு உள்ளன. தவிர, வெண்மரம், நூக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர், தஞ்சை ஓவியம், தஞ்சை கலைத்தட்டு, பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து சிலைகளுக்கும், 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று, மேலாளர் தெரிவித்தார்.