உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி: சவுளுப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (செப்.,7ல்) நடந்த மாவிளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி அடுத்த, சவுளுப்பட்டியில் மாரியம்மன் கோவில் விழா கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர், பழைய ஊர் மாரியம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டது. துள்ளுமாவு மற்றும் தட்டு வரிசை ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 6ல்) காலை, சக்தி முத்துமாரியம்மனுக்கு பூ சாற்றுதல், இரவு பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். நேற்று (செப்., 7ல்) காலை, 10:00 மணிக்கு கோவிலில் திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !