ஷீரடி பாபா பாதுகை 17ல் கோவை வருகை
ADDED :2592 days ago
கோவை:ஷீரடி சாய்பாபா மகா சமாதியான நுாற்றாண்டு தினத்தையொட்டி, அவர் அணிந்திருந்த பாதுகை நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் மற்றும் ஷீரடி சாய் பக்தர்கள் சார்பில், பாபா பாதுகை வரும், 17ல் கோவை வருகிறது. பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் காலை, 8:00 முதல் இரவு, 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது.