பச்சியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :2669 days ago
சங்ககிரி: அசர பச்சியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா நடந்தது. சங்ககிரி அருகே, அன்னதானப்பட்டியில், குடியை மறக்க கயிறு கட்டும், அசர பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து, ஏராளமான குடிமகன்கள், தினமும் வந்து கயிறு கட்டி செல்கின்றனர். இக்கோவில் திருவிழா, கடந்த, 24ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, பொங்கல் வைத்தல், சுவாமிகள் மெரமனை, வாண வேடிக்கை, மகா தீபாராதனை நடந்தது. அசர பச்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். வரும், 14ல், மறுபூஜை நடக்கவுள்ளது.