ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம்
ADDED :2591 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி சன்னிதியில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் செப். 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.அன்று காலை 10:30 மணிக்குமேல் 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. அதனை தொடர்ந்து தினமும் காலையில் மண்டபம் புறப்படுதலும், இரவு திருவீதி புறப்பாடும் நடக்கிறது. செப்.17 இரவு தங்ககருடசேவையும், செப். 19 பெரியபெருமாள் சயனசேவையும், செப்.21 அன்று செப்புதேரோட்டமும், செப்.26 பகல்பத்து மண்டபத்தில் புஷ்பயாகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.