உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

மயிலம் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்

மயிலம்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் நேற்று (செப்., 9ல்) அமாவசையையொட்டி ஜோதி தரிசனம் நடந்தது.

அமாவாசையையொட்டி காலை 6:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வக்ரகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12:00 மணிக்கு அமாவசை ஜோதி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளி, குண்டலிமா முனிவர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை சுப்பரமணியர், வக்ரசனி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !