சேலம், தாதகாப்பட்டியில், மனவளக்கலை மன்றம் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா
ADDED :2589 days ago
சேலம்: சேலம், தாதகாப்பட்டியில், மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை யோகா மற்றும் ஆன்மிக கல்வி மையம் உள்ளது. இங்கு, வேதாத்திரி மகரிஷியின், 108ம் ஆண்டு ஜெயந்தி விழா, உலக அமைதி தினவிழா, அறக்கட்டளையின், 21ம் ஆண்டு தொடக்க விழா, அறிவு திருக்கோவில் எட்டாமாண்டு தொடக்க விழா, நேற்று (செப்., 9ல்) நடந்தது.
ஓய்வு பேராசிரியர் பொன்னம்பலனார் தலைமை வகித்தார். அதில், மகிரிஷி சிறப்பு, அறிவு திருக்கோவில் குறித்து, மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.