ஆண்டிபட்டியில் சதுர்த்திக்கு தயாரான விநாயகர் சிலைகள்
ADDED :2584 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தயாரான விநாயகர் சிலைகள் சதுர்த்தி விழாவிற்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப் படுகிறது.
நாளை (செப்., 13ல்) விநாயகர் சதுர்த்திக்காக சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் வளாகத்தில் நூறுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த சில வாரங்களாக வடிவமைக்கும் பணிகள் நடந்தது.
சிலைகளுக்கான வர்ணம் பூசுவது உட்பட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து சிலைகளுக் கான ஆர்டர் கொடுத்தவர்கள் தற்போது அதனை வாகனங்களில் தங்கள் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.