கடம்பத்தூர் விநாயகர் கோவிலில் 25வது சதுர்த்தி விழா
ADDED :2582 days ago
கடம்பத்தூர்: கடம்பத்தூர் பெரிய விநாயகர் கோவிலில், 25ம் ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழா, நாளை (செப்., 13ல்) நடைபெற உள்ளது.
திருவள்ளூர் அடுத்த. கடம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ளது பெரிய விநாயகர் கோவில். இந்த ஆண்டு, 25ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, நாளை கொண்டாடப்படஉள்ளது.
அன்று, மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு கணபதி ஹோமமும், இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.பின், இரவு, 8:00 மணிக்கு, 24 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா அன்று வைக்கப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளுக்கும், மகா தீப ஆராதனை நடைபெறும்.
வரும், 16ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, ராஜகணபதிக்கு விடையாற்றி விழா நடத்தி,அருகில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்படும்.