வானூரில் வினாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ADDED :2694 days ago
வானூர்: வினாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் வானூரில் நடந்தது.போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ஏழுமலை, பரசுராமன், சரவணன், தனிப்பிரிவு செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வானூர் பகுதியில் 36 இடங்களில் வினாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரியுள்ளவர்களின், அரசின் விதிமுறைகளை விளக்கி கூறப்பட்டது.