விழுப்புரம் புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு விழா
ADDED :2581 days ago
விழுப்புரம்:விழுப்புரம் ரயிலடி சந்திப்பில் அமைந்துள்ள புனித ஆரோக்கியமாதா சிற்றாலயத்தில் 29வது ஆண்டு விழா நடந்தது.விழாவை யொட்டி, மாலை 6.00 மணிக்கு புனித ஆரோக்கியமாதா வண்ண மலர்களால் ஜோடிக்கப்பட்டு, சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து, 7.00 மணிக்கு பங்கு தந்தைகள் பிச்சைமுத்து, ஆல்பர்ட் பெலிக்ஸ், உதவி பங்கு தந்தை ஜீவா ஆகியோர் சிறப்பு பிராத்தனையை நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் கர்னீஸ்ராஜ், தீபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.