திருச்சி விநாயகர் சிலை ஊர்வலம்: திருச்சியில் நாளை (செப்.,15ல்) போக்குவரத்து மாற்றம்
திருச்சி: விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, திருச்சி மாநகரில் நாளை 15 ல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலைகள் செப்.,15ல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, மாற்று ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, துறையூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மார்க்கத்திலி ருந்து, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வரும் புறநகர் பஸ்கள் அனைத்தும், நெ.,1 டோல் கேட்டிலிருந்து, சென்னை பைபாஸ் ரோடு வழியாக, பழைய பால்பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ்., டோல்கேட், தலைமை அஞ்சலகம், ஒத்தக்கடை முத்தரையர் சிலை, எம்.ஜி.ஆர்., சிலை, அண்ணாநகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. ஜங்ஷன், கரூர் பைபாஸ் வழியாக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு மீண்டும் வந்த வழியே செல்ல வேண்டும். லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் வாத்தலை பகுதி டவுன் பஸ்கள் அனைத்தும், புது கொள்ளிடம் பாலம், சோதனைச்சாவடி எண்-6, திருவானைக்காவல் டிரங்க் ரோடு, ஜே.ஏ.சி., கார்னர் வழியாக, ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர், ராஜகோபுரம், காந்திசாலை, திருவானைக்காவல் டிரங்க் ரோடு சந்திப்பு வழியே வந்து செல்ல வேண்டும்.
சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து டவுன் பஸ்களும், மேலரண் சாலை, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார் மேடு, பால் பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, சோதனை சாவடி எண்-6, டிரங்க் ரோடு திருவானைக்காவல் சந்திப்பு, காந்தி ரோடு வழியாக ஸ்ரீரங்கம் சென்று பயணிகளை இறக்க வேண்டும். ஏற்றிக்கொண்டு பின் மீண்டும் ராஜகோபுரம், திருவானைக்கோவில் சந்திப்பு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, பால்பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ்., டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, அண்ணா நகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. சந்திப்பு, மாரீஸ் மேம்பாலம், காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும் டவுன் பஸ்கள், அனைத்தும் மெயின்கார்டு கேட், மேலரண் சாலை, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார் மேடு, பால்பண்ணை ரவுண்டானா, வழியாக திருவெறும்பூர், துவாக்குடி சென்று, மீண்டும் பால் பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ்., டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்.ஜி.ஆர்., சிலை, அண்ணா நகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, கே.டி., சந்திப்பு, மாரீஸ் மேம்பாலம், காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பஸ்டாண்ட் வரவேண்டும்.
கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும், குளித்தலை காவேரிப் பாலத்தில் திருப்பி விடப் பட்டு, முசிறி நெ.,1 டோல்கேட், சென்னை பைபாஸ், பால் பண்ணை ரவுண்டானா வழியாக, தஞ்சாவூருக்கும், டி.வி.எஸ்., டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும். தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங் கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, காவேரி பாலம், நெ.,1 டோல்கேட் வழியாக, முசிறி, குளித்தலை சென்று, அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும். ஊர்வலம் வரும் பாதையில், தேவைப்பட்டால் அதிகாரிகளின் ஆலோசனையின்படி இந்த போக்குவரத்து மாற்றத்தில் சிறு, சிறு மாற்றங்களும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.