கோபியில் விநாயகர் சதுர்த்தி கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :2578 days ago
கோபி: கோபி கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாய கர் சதுர்த்தியையொட்டி, கோபி பச்சமலை மற்றும் பவளமலை, பாரியூர் உள்ளிட்ட பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நேற்று(செப்.,13ல்) நடந்தது. நம்பியூர், கவுந்தப்பாடி பகுதி கோவில்களிலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர். கோபி வேலுமணிநகர் சக்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு விபூதி காப்பு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின், மூலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து சென்றனர்.