ராசிபுரம் நாமகிரிப்பேட்டையில், களிமண் விநாயகர் சிலை: இளைஞர்கள் சாதனை
ADDED :2577 days ago
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டையில், களிமண்ணால் விநாயகர் சிலையை உருவாக்கி இளைஞர்கள் சாதனை படைத்தனர். நாமகிரிப்பேட்டை அடுத்த, பட்டறை மேட்டில் முழுவதும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இப்பகுதி இளைஞர்களே, இதை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். களிமண்ணில் வேறு ஏதாவது மணல், செம்மண் கலந்தால்தான் சிலை செய்ய முடியும். இல்லை என்றால், உருவம் குழைந்துவிடும். ஆனால், இதில் களிமண்ணை மட்டுமே பயன்படுத்தி, ஏழடி உயர விநாயகர் சிலையை செய்துள்ளனர். வண்ண காகிதங்கள், பொட்டுகள், துணியை கொண்டு அலங்கரித்துள்ளனர். அதேபோல், வேலவன் நகரில் அனுமன், கிருஷ்ணனுடன் உள்ள விநாயகர் சிலையை வைத்திருந்தனர். இங்கு நடந்த விழாவை, நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் மணி தொடங்கி வைத்தார்.