குமாரபாளையம் தேவூர், மயிலம்பட்டி ஆதிமங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2578 days ago
குமாரபாளையம்: தேவூர், மயிலம்பட்டி ஆதிமங்கள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. குமாரபாளையம் அருகே தேவூர், மயிலம்பட்டி ஆதிமங்கள விநாயகர், சின்ன மாரியம்மன், பொட்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 10ல் துவங்கியது. காவேரிப்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்திம் (செப்., 12ல்) காலை, ஆதிமங்கள விநாயகர், சின்ன மாரியம்மன், பொட்டம்மன் கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.
சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.