உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் விநாயகர் சதுர்த்தி விழா

கண்டாச்சிபுரம் விநாயகர் சதுர்த்தி விழா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தடி அரசமுக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடந்தது.

இதையொட்டி, நேற்று (செப்., 13ல்) காலை 9 மணிக்கு சிவாச்சாரியர் பாலகிருஷ்ணர் தலைமை யில் கணபதி ஹோமபூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு வெள்ளிக் காப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விநாயகர் பெருமை என்ற தலைப்பில் ராமமூர்த்தி பேசினார்.இரவு தீபாரதனைகள் நடைபெற்றன.
இதேபோல், வரசித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில்,காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து வரசித்தி விநாயகர் வீதியுலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !